மணவாளக்குறிச்சி: 2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

0
349

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ரூபஸ் (44). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி மேரி ஜெனிலா (36). இந்தத் தம்பதிக்கு 11, 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ரூபஸ் மீன்பிடித் தொழிலுக்காகக் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று விட்டார்.

சம்பவத்தினம் மேரி ஜெனிலா தனது மகள்களை அழைத்துக்கொண்டு கன்னியாகுமரியில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர்களைக் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனை அறிந்து ஊருக்கு வந்த ரூபஸ் மனைவியையும் குழந்தைகளையும் கண்டுபிடித்துத் தரக்கோரி மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 9) புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு மகள்களுடன் மாயமான மேரி ஜெனிலாவைத் தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here