Home கன்னியாகுமரி செய்திகள் மணலோடை: பழங்குடியினர் நல மாணவர் விடுதி திறப்பு

மணலோடை: பழங்குடியினர் நல மாணவர் விடுதி திறப்பு

0

திருவட்டார் வட்டம், மணலோடை பழங்குடியினர் நல உண்டு உறைவிட அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் விடுதியினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,   மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் இன்று (06. 06. 2025) திறந்து வைத்து, மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, கூறியதாவது: –

   பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பழங்குடியின மக்கள் கல்வி வளர்ச்சி பெறும் வகையில் மணலோடையில் பழங்குடி நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியானது 01. 05. 1962-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளி 15. 10. 1993 அன்று நடுநிலைப் பள்ளியாக அங்கீகாரம் பெற்று, 08. 02. 2021 அன்று உயர்நிலைப் பள்ளியாக அங்கீகாரம் பெற்றது. இப்பள்ளி கடந்த  63 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய இந்த பள்ளி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட மாணவர் விடுதியானது தமிழக அரசின் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 24- இன் கீழ் ரூபாய் 42. 55 இலட்சம் செலவில் முழுமையாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.   என அமைச்சர்   கூறினார்.  

நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா,   ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version