மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

0
18

மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தலில் வேட்புமனுத் தாக்​கல் இன்​றுடன் (செப்​.16) நிறைவு பெறுகிறது. இந்த சூழலில், கருத்​துக் கணிப்​பு​களுக்கு தேர்​தல் ஆணை​யம் தடை விதித்​துள்​ளது.

தமிழகத்​தில் மது​ராந்​தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகு​தி​களுக்கு அக்​டோபர் 6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 9-ம் தேதி தொடங்​கியது. வேட்​புமனு தாக்​கல் செய்ய இன்று (செப்​டம்​பர் 16) கடைசி நாளாகும்.

இந்​நிலை​யில் மது​ராந்​தகம் தொகு​தி​யில் வேட்​பாளர்​கள் மரகதம் குமர​வேல் (தவெக), பரந்​தாமன் (தி​முக), ஜானகி​ராமன் (நாம் தமிழர்) மற்​றும் 3 சுயேச்​சைகள் நேற்று மனுத்​தாக்​கல் செய்​தனர். இது​வரை மது​ராந்​தகம் தொகு​தி​யில் 13 பேர் மனுத்​தாக்​கல் செய்​துள்​ளனர்.

கடைசி நாளான இன்று அதி​முக வேட்​பாளர் கணிதா சம்​பத் வேட்​புமனு தாக்​கல் செய்​வார் என்று தெரி​கிறது. அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் திமுக வேட்​பாளர் சுகன்​யா, கோட்​டாட்​சி​யரும் தேர்​தல் அதி​காரி​யு​மான பெலிக்ஸ் ராஜா​விடம் நேற்று வேட்​புமனு தாக்​கல் செய்​தார்.

அப்​போது ஈரோடு எம்​.பி. பிர​காஷ், முன்​னாள் அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், கயல்​விழி செல்​வ​ராஜ், மாவட்​டச் செய​லா​ளர் இல.பத்​ம​நாபன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். தாராபுரத்​தில் இது​வரை 17 பேர் மனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

இதையடுத்து வேட்​புமனுக்​கள் மீதான பரிசீலனை நாளை (செப்​டம்​பர் 17) நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வேட்பு மனுக்​களை திரும்​பப் பெறு​வதற்​கான அவகாசம் செப்​டம்​பர் 19-ம் தேதி வரை வழங்​கப்​பட்​டுள்​ளது. அன்று மாலையே இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​படும்.

இந்​நிலை​யில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவுக்கு முந்​தைய, பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் முடிவு​களை வெளி​யிட​வும், பரப்​ப​வும் தேர்​தல் ஆணை​யம் தடை விதித்​துள்​ளது. அதன்​படி வாக்​குப்​ப​திவு நாளான அக்​டோபர் 6-ம் தேதி காலை 7 முதல் மாலை 6.30 மணி வரை அச்சு அல்​லது மின்​னணு ஊடகம் வாயி​லாக தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​களை நடத்​து​வதும், அதன் முடிவு​களை வெளி​யிடு​வதும் அல்​லது விளம்​பரப்​படுத்​து​வதும் முற்​றி​லும் தடை செய்​யப்​பட்​டுள்​ளது.

இதேபோல், வாக்​குப்​ப​திவு முடிவடை​யும் நேரத்​துக்கு முந்​தைய, 48 மணி நேரங்​களில், கருத்​துக்​கணிப்பு முடிவு​கள் அல்​லது தேர்​தல் தொடர்​பான எந்​தவொரு செய்​தி​யை​யும் மின்​னணு ஊடகங்​களில் காட்​சிப்​படுத்​து​வது தடை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த விதி​முறை​களை மீறிச் செயல்​படு​வோர் மீது சட்​டப்​படி உரிய நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும் எனவும் தேர்​தல் ஆணை​யம் எச்​சரித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here