களியக்காவிளை பகுதியை சேர்ந்த ரோஸ்மேபல் (52) என்பவருக்கும், அவரது கணவரின் தம்பி சுபனேஷ் (57) மற்றும் அவரது மனைவி லலிதா குமாரிக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ரோஸ்மேபல் வீட்டிற்கு மின் இணைப்பு எடுக்கும்போது, சுபனேஷ் மற்றும் லலிதா குமாரி ஆகியோர் கத்தியால் ரோஸ்மேபலை குத்தியுள்ளனர். இது தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்யாத நிலையில், குழித்துறை நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














