மார்த்தாண்டம், வடக்கு தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வனத்துறை ரேஞ்சர் செல்லதுரை சாமுவேல் (73) என்பவரின் வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமானது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டு வேலைக்காரியான கருங்கல் பகுதியைச் சேர்ந்த பிரேமா (40) நகைகளைத் திருடியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமாவைக் கைது செய்து, திருடப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர் பிரேமா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.














