செப்டம்பர் மாதத்திற்கான நல உதவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ‘உதவும் கரங்கள் காஞ்சாம்புறம்’ அமைப்பின் சார்பில் 79 குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 வீதம் வழங்கப்பட்டது. ‘இயன்றவரை இயலாதவர்க்கு’ என்ற நோக்கோடு, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இல்லங்களில் சென்று நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் ஜெயின் தலைமை தாங்கினார். செயலாளர் சுகன்யா, பொருளாளர் சஜின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.