நாகர்கோவில் மாநகரில் நேற்று வடசேரி பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் டிரைவர் மது போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதேபோல பார்வதிபுரம் பாலம் அருகே மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 2 வாலிபர்களை நிறுத்தி பிடித்து சோதனை செய்ததில் ஓட்டுனர் உரிமம் இல்லாததும், மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபர்கள் 2 பேருக்கும் தலா ரூ. 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வடசேரி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.














