குமரி: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் பக்ரீத் பொருநாள் வாழ்த்து

0
166

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது; தியாகத் திருநாளாம் ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும், உள்ளம் பூரித்தும் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் உன்னத தியாகத்தைப் போற்றி, இந்நன்னாள் நம்மை தியாக உணர்வுடன் வழிநடத்துகிறது. 

அவரது அறிவு, துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தியாக மனோபாவம் நமக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன. தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொண்டு, அநீதிக்கு எதிராகப் போராடி, அன்பு, அமைதி, சமூக நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவை செழித்தோங்கவும், ஒடுக்கப்பட்டோர் உயரவும், நீதி வெற்றி பெறவும் தியாக உறுதியேற்போம். இந்நன்னாளில், உலகெங்கும் அமைதி, மனிதநேயம், மத நல்லிணக்கம் தழைக்கவும், குறைகள் நீங்கி மக்கள் நிறைவான வாழ்வு பெறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here