கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் காணியாளன் புதுத்தெரு அருள்மிகு ஸ்ரீ ஞான முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆடி பெருக்கையொட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனை வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது.














