கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் பார்வதிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ் நின்று கொண்டிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அந்த மினிபஸ் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த மினிபஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை மீறி மாற்று வழித்தடத்தில் இயங்கியது தெரிய வந்தது. இதையடுத்து மினிபஸ்சை போலீசார் பறிமுதல் செய்து ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் நேற்று வடசேரி பகுதியில் இன்சூரன்ஸ் இல்லாமல் விதிமுறையை மீறி இயங்கி வந்த மினிபஸ்சையும் போலீசார் பறிமுதல் செய்து ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த 5 வாலிபர்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.