கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் நேற்று (ஜூன் 2) 3 காட்டு யானைகள் ரப்பர் தோட்டத்தில் புகுந்தன. கிராம மக்களும் வனத்துறையினரும் சேர்ந்து யானைகளை துரத்தினர். இதில் ஒரு யானை பட்டப்பாறை பகுதியில் மத போதகர் ராஜேஷ் (46) என்பவரை தந்தத்தால் முதுகில் குத்தி கொன்றது. பலத்த காயமடைந்த அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறையினரும், காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
