கேரளாவின் பூவார் பொழி முகத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவன் டேனியல் கிறிஸ்டியன் திடீரென கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானான். நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், நண்பர்களால் மாணவனை காப்பாற்ற முடியவில்லை. பூவார் தீயணைப்பு படை வீரர்கள் நேற்று இரவு வரை தேடியும் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை மீண்டும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
