Home கன்னியாகுமரி செய்திகள் மகன் இறந்தது தெரியாமல் போலீசில் புகாரளித்த தாய்

மகன் இறந்தது தெரியாமல் போலீசில் புகாரளித்த தாய்

0

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 2 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் டூவீலருடன் வாய்க்காலில் விழுந்து இறந்து கிடந்தார். அவரை அடையாளம் காண முடியாத நிலையில் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளபுரம் பகுதியைச் சேர்ந்த சரோஜினி, தனது மகன் சுஜினை காணவில்லை என தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்தார். அவரிடம் இறந்த வாலிபரின் உடலை போலீசார் காண்பித்தனர்.

இறந்தது தனது மகன் சுஜின் 31, என்பதை அவர் உறுதிசெய்தார். சுஜின் குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version