குமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் அனிதா குமாரி தலைமையில் வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் நேற்று இரவு அருமனை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1500 கிலோ ரேஷன் அரிசி காணப்பட்டது. உடனே டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து அதிகாரிகள் அரிசியை மீட்டு காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
இது போன்று இன்று அதிகாலையில் வில்லுக்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அப்போது கேரள பதிவு கொண்ட சொகுசு காரை நிறுத்தி அதில் இருந்து ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. மணவாளக்குறிச்சி பகுதியில் நடந்த சோதனையிலும் 50 கேன்களில் சுமார் 2000 லிட்டர் மீனவர்களின் படங்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மூன்று வாகனங்களும் மேல் நடவடிக்கைக்காக விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.