கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழக ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு துணைத்தலைவருமான எம் ஏ கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: – பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு வக்ஃபு திருத்த மசோதா தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு மீறி சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மஸ்ஜித்துகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக மக்கள் திரள் எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில், நாளை வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜமாஅத்துகளில் ஒரே நேரத்தில் ஜும்மா தொழுகைக்கு பின் ஒன்றிய அரசை கண்டித்து பள்ளிவாசல்கள் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளிலும் பள்ளிவாசல்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.














