
செங்கவிளை 4 வழிச்சாலை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார், முறையான ஆவணங்கள் இன்றி எம் சாண்ட் ஏற்றிச் சென்ற கேரள மாநில லாரியை சோதனை செய்தனர். லாரியில் ஆவணங்கள் இல்லாததால், லாரியை பறிமுதல் செய்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநர் சஜு (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.













