Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: நள்ளிரவில் அனுமதி மறுத்த கனரக வாகனங்கள் – வீடியோ

குமரி: நள்ளிரவில் அனுமதி மறுத்த கனரக வாகனங்கள் – வீடியோ

0

தக்கலை பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் டாரஸ் லாரி மோதி இறந்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. உத்தரவின் பேரில் கனிம வள அனைத்து கனரக வாகனங்களுக்கும் 4 வழி பாதை முடியும் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று நள்ளிரவு 11 மணி முதல் தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பகுதி வழியாக கனரக லாரிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி.யின் எச்சரிக்கையை மீறி நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version