குமரி: ரப்பர் குடோனில் தீ விபத்து

0
157

குமரிமலையோர கிராமமான ஆறுகாணி பகுதியில் ஷீன் டோமி என்பவரது வீட்டின் பின்புற பகுதியில் ரப்பர் சீட்டை பதப்படுத்தி உபயோகப்படுத்தும் குடோன் ஒன்று வைத்திருந்தார். இதில் ஏராளமான ரப்பர் சீட்டுகள் காணப்பட்டன. இந்த நிலையில் 20-ம் தேதி மதியம் திடீரென அந்த குடோனில் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அருகில் உள்ள மரங்களில் பரவி மரங்கள் கருகியது. 

மேலும் கட்டிடம் விரிசல் அடைந்தது. உடனடியாக அப்பகுதியினர் குளசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி ரப்பர் குடோனில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் ஏராளமான ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதம் அடைந்தது. பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிய வருகிறது. ஆறுகாணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here