மார்த்தாண்டம் பகுதியில் கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று 22ம் தேதி நேரில் பார்வையிட்டு, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மருந்து வகைகள் தங்கு தடையின்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.