குமரி மாவட்டத்தில் பைக் திருட்டு புகார்கள் தொடர்பாக தனிப்படையினர் விசாரணை நடத்தினர். கோட்டார், பூதப்பாண்டி, களியக்காவிளை காவல் நிலைய பகுதிகளில் திருடிய முஹம்மது சம்சீர் (23), திற்பரப்பு ஜெகன் (40), குளப்புறம் ரங்கேஷ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. திருடியதை அவர்கள் போலீசாரிடம் நடித்துக் காட்டினர். மூவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.














