கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகப் பணிபுரியும் ஆக்சினி தர்ஷினி, வீட்டைப் பூட்டிவிட்டு கோவை சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 57 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
            













