குமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்துவதை தடுக்க வேண்டும், திற்பரப்பு பேரூராட்சியில் அனுமதியின்றி இயங்கும் பன்றி பண்ணைகளை மூட வேண்டும், சாலைகளை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி திருவட்டார் வடக்கு ஒன்றியம் சார்பில் குலசேகரம் அரச மூடு சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவட்டார் வடக்கு வட்டார தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














