Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: பேரன் இறந்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல்: பேரன் இறந்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

0

குளச்சல் அருகே உள்ள லியோன் நகரை சேர்ந்தவர் வர்கீஸ் மனைவி சகாயமேரி (54). இந்த தம்பதிக்கு சகாய டேனியல், சகாய லிபியா என்ற மகனும் மகளும் உள்ளனர். இதில் சகாய லிபியாவுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் லிஜோன் (8) உடல் நலமின்றி கடந்த 45 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். பேரன் இறந்து விட்டதால் சகாயமேரி மிகவும் வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. 

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு சகாயமேரி இறந்துள்ளார். உறவினர்கள் குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பெண்ணின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சகாய லிபியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version