
மார்த்தாண்டம் அருகே மாணவியிடம் 144 பவுன் நகைகளைப் பெற்று மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி நகைகளைப் பெற்றதாக ஜெனிஷ் (25) மீது மாணவி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் ஜெனிஷை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், 60 பவுன் நகைகளை மீட்டனர். அவரது தம்பி ஜெபிசும் கைதானார்.
விசாரணையில், மோசடி செய்யப்பட்ட நகைகளில் 40 பவுன் மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடையில் கொடுக்கப்பட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் லாலியிடம் (48) போலீசார் விசாரணை நடத்தினர். கேட்டபோது அவர் நகைகளை ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக லாலியை போலீசார் கைது செய்தனர்.
40 பவுன் நகைகளின் நிலை, மீதமுள்ள 44 பவுன் நகைகள் மற்றும் பணம் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.