
இளம் பெண்ணிடம் அநாகரீகச் செயல்: வடமாநில இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு!
டி.வி.டி காலனி பகுதியில் இளம் பெண் ஒருவரிடம் அநாகரீகமாக சைகை காட்டி நடந்துகொண்ட வடமாநில இளைஞர்களைப் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், அவர்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவத்தின் போது மொத்தம் மூன்று பேர் வந்த நிலையில், ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிடிபட்டவர்கள் கம்பளம் பஜார் பகுதியில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.