சாஸ்தான்கரை பகுதியைச் சேர்ந்த சந்திரன் (65) என்பவர் ஹாலோ பிளாக் சிமெண்ட் கற்கள் கம்பெனி நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் தேடிச் சென்றபோது, அப்பகுதியில் உள்ள தோப்பில் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.