குளச்சல் அருகே வாணியக்குடி கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரெமிஸ்(48). மீன்பிடித் தொழிலாளி. இவருடைய வீட்டுக்கு செல்லும் பாதை சற்று குறுகலாக அமைந்துள்ளதால், இந்த பாதை தொடர்பாக ரெமிசுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய குருசு மனைவி நிஷா (40) என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் ரெமிஸ் இன்று தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நிஷாவின் உறவினர்களான மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த நெல்சன் (52), அவருடைய மகன்கள் கௌசிக் (23) ரோகித் (21) ஆகியோர் சேர்ந்து ரெமிசை கம்பியால் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் நிஷா, நெல்சன், கௌஷிக், ரோகித் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.