Home கன்னியாகுமரி செய்திகள் குழித்துறை:  இரவில் டாரஸ் லாரி மோதி வாலிபர் சாவு

குழித்துறை:  இரவில் டாரஸ் லாரி மோதி வாலிபர் சாவு

0

திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் கொத்தனார். இன்று 7-ம் தேதி வெளிநாட்டிற்குச் செல்ல உள்ள நிலையில் நேற்று இரவு தனது இரண்டு சிறுகுழந்தைகளுக்குப் பிரியாணி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். 

குழித்துறை சந்திப்புப் பகுதியில் வைத்து இவரது வாகனத்தின் மீது கனிமவள டாரஸ் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். ஊர்மக்கள் ஆத்திரமடைந்து லாரிகளுக்கு எதிராகக் காவல்துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். களியக்காவிளை போலீசார் முரளி உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version