குமாரபுரம் பேரூராட்சியில் ஓட்டுநராகப் பணிபுரிந்த எட்வின் ஜோஸ் (41), கடந்த 30ஆம் தேதி களியக்காவிளை அருகே அதிவேக கனிம வள லாரி மோதியதில் படுகாயமடைந்து, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.