கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 4-ம் தேதி துவங்கியது. ஒன்பதாம் திருவிழாவில் இன்று காலை மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். இந்த ஊர்வலமானது மார்த்தாண்டம், வெட்டுமணி, காப்புக்காடு குன்னத்தூர், முன்சிறை, புதுக்கடை வழியாக தேவஸ்தானத்தில் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அம்மன் பவனி நடந்தது.