கொல்லங்கோடு அருகே பன விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (44). இவர் கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கொல்லங்கோடு வெட்டுக்காடு பகுதி சேர்ந்த கோலிங்க்ஸ் (25) என்பவர் மது குடித்தார். மது குடித்துவிட்டு ஸ்நாக்ஸ் கேட்டார். ஸ்நாக்ஸ் கொடுப்பதற்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த வாலிபர் மேஜை மீது இருந்த இரும்பு வாளியை எடுத்து ஸ்ரீகுமாரை தாக்கினார். இதில் காயமடைந்தவரை குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் கோலிங்க்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Latest article
தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் கடந்த 2004-முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்களாக வெளியான சின்னத்திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’.
இதில் மார்ட்டின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் டெய்லர் சேஸ்....
1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரவுடி ஜனார்த்தனா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில்...
‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது.
டி.ராஜேந்தர், கனிகா...








