கிள்ளியூர்: சாலைகள் சீரமைக்க ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு

0
127

சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: – கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த பல சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தற்போது முதல் கட்டமாக மிடாலம், திப்பிறமலை ஊராட்சிகளில் 4 சாலைகளை சீரமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மிடாலம் ஊராட்சி, கஞ்சிரம்பரம்பு – AD காலனி சாலை ரூ.62.27 லட்சம், காட்டுவிளை – குற்றிபாறவிளை சாலை ரூ.50.81 லட்சம், காட்டுவிளை – பறம்பு – கும்பன்விளை சாலை ரூ.48.70 லட்சம், திப்பிறமலை ஊராட்சி, திப்பிறமலை – ஈத்தங்காடு சாலை ரூ.68.36 லட்சம் என 4 சாலைகளை சீரமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகள் விரைவில் பணிகள் துவங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here