கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐரேனிபுரம் முதல் திக்கணங்கோடு வரை சாலையின் நடுவே சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தது. இதை நவீன முறையிலான DI பைப்புகளை பதிக்க கிள்ளியூர் எம்எல்ஏ அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்காக ரூ. 26.68 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ராட்சத சிமெண்ட் குழாய்களை மாற்றி நவீன முறையிலான DI பைப்புகளை சாலையின் ஓரமாக பதிக்கும் பணிகளை இன்று சடையன்குழி பகுதியில் வைத்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம்எல்ஏ, குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.