கிள்ளியூர் அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (59). தொழிலாளி. இவர் நேற்று கருங்கல் – புதுக்கடை சாலையில் வெள்ளையம்பலம் பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த கைசூண்டி என்ற பகுதியைச் சேர்ந்த வினு (42) என்பவர் அரிகிருஷ்ணன் மீது மோதினார்.
இதில் படுகாயமடைந்த அரிகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














