கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், தனக்கு வாக்களித்த சூழால் ஊராட்சி மக்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தார். அவர் பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாக மக்களை சந்தித்து தனது நன்றியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
