கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி பிரதநிதிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ உட்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.














