கிள்ளியூர் வட்டம் இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி பெறப்பட்டு, 47 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி வருகின்றனர். இந்த 47 பயனாளிகளையும் நேரில் கலெக்டர் அழகுமீனா நேற்று சந்தித்தார். இன்னும் 5 மாத காலத்திற்குள் வீடு கட்டும் பணியினை முடித்திட பயனாளிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. நடைபெற்ற ஆய்வில் துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.