கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை தலைவர் ஜோயல் சிங், ஜஸ்டின் ராஜ், ஷீஜா, திவ்யா, சந்தோஷ், ஜெயசிங், ராஜ் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அனைவருக்கும் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்று, உறுப்பினர் அட்டை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.
            













