தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: – தமிழக பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் சார்ந்த திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதி உதவி அளித்து வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த கல்வியாண்டில் நிதி ரூ. 2,152 கோடி மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழ்நாடு அரசுக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய கல்வித் துறை அமைச்சர் தேசிய கல்வி கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால், தேசிய கல்வி திட்டம் அமல்படுத்தப்படாத வரை தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளார். எனவே தமிழகத்துக்கான நிதியை உடனே ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களை திரட்டி போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு கூறியுள்ளார்.