கருங்கல்: அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

0
344

கிள்ளியூர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. திப்பிரமலை பஞ்சாயத்து தலைவர் புஷ்பலதா, கிள்ளியூர் வட்டார கல்வி அலுவலர் கலாவதி, கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். 

இதில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் மற்றும் இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஸ்ரீவித்யா, ஒருங்கிணைப்பாளர் ஜான் பெனட்ராஜ், தாமஸ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here