கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் குழுவினர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிற்காமல் வேகமாகச் சென்ற டாட்டா சுமோ வாகனத்தை துரத்திச் சென்று இரணியல் அருகே வள்ளி ஆற்றுப்பாலம் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். வாகனத்தில் இருந்து சுமார் 1200 லிட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது. இந்த மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு மானிய விலையில் அரசால் வழங்கப்படும் நிலையில், கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.














