களியக்காவிளை: நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து மோசடி

0
128

களியக்காவிளையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த பிர்லா ஜெஸ்லின் (50) மற்றும் அவரது மகன் அனுஷ் (21) ஆகியோர் நகைகளை அடகு வைத்து மொத்தம் ரூ.55 லட்சத்து 26 ஆயிரத்து 137 கடனாகப் பெற்றனர். இந்நிலையில் அவர்கள் அடகு வைத்த நகைகளை ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் போலியானவை என்று தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து பிர்லா ஜெஸ்லின் மற்றும் அனுஷிடம் இது குறித்துத் தெரிவித்து பணத்தைச் செலுத்தவும் அதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அவர்கள் ரூபாய் 25 லட்சத்து 64 ஆயிரத்து 200 மட்டுமே செலுத்தியுள்ளனர். மீதமுள்ள தொகையைச் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து போலி நகைகளை வைத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கேட்டு நிதி நிறுவன மண்டல மேலாளர் விஜி சேகர் என்பவர் நாகர்கோவில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் பிர்லா ஜெஸ்லின் உட்பட இரண்டு பேர் மீது மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here