திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா பாய் (57) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த பத்மமூர்த்தி (50) மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் சொத்து தகராறு தொடர்பாக கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சொத்து பிரச்சனை தொடர்பாக சமாதானம் பேச அழைத்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.














