Home கன்னியாகுமரி செய்திகள் களியக்காவிளை: பைக்கில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

களியக்காவிளை: பைக்கில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

0

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளப்பனேரி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (59). இவர் மனைவி பாமா (54). இவர்கள் தற்போது மார்த்தாண்டம் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். சம்பவ தினம் பாமா தனது மகன் கோகுல் கிருஷ்ணா (29) என்பவருடன் பைக்கில் குழித்துறை பகுதியில் உள்ள வி எல் சி மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக்கில் இருந்து தடுமாறி பாமா கீழே விழுந்தார். 

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பாமா நேற்று (11-ம் தேதி) உயிரிழந்தார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி மகன் கோகுல் கிருஷ்ணா என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version