களியக்காவிளை அருகே குந்நுவிளை என்ற பகுதியில் பத்திரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் காணிக்கையாக பணம் போடுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் திருவிழா நிறைவடைந்த பின்பு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் ரூபாயை கோயில் பூஜை பொருட்கள் வாங்க பயன்படுத்தப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம திருடர்கள் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாக தலைவர் பால்ராஜ் நேற்று (27ம் தேதி) களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
 
            

