களியக்காவிளை: நகைக்கடை ஊழியரை அவதூறு பேசியவர் மீது வழக்கு

0
245

களியக்காவிளை அருகே கைதக்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங் (47) நகை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெனடிக்ட் (57) என்ற கொத்தனாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஜெபசிங் அவரது வீட்டினருக்கு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பெனடிக்ட் முன்விரோதம் காரணமாக ஜெபசிங்கை தகாத வார்த்தைகளால் பேசினார். இது குறித்து ஜெபசிங் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பெனடிக்ட் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here