கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட ஒருநூறாம் வயல் பகுதியில் ஓமனா (60) என்பவரின் வீட்டை நேற்று (ஜனவரி 30) யானைகள் கூட்டம் புகுந்து சூறையாடியது. வீட்டைச் சுற்றி யானைக் கழிவுகள் கிடந்ததால், யானைகள்தான் சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே மூன்று முறை இந்த வீட்டை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. ஓமனா வனத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.














