இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தேடிச் சென்று கொல்வோம்: ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை சபதம்

0
13

மத்​திய கிழக்கு நாடு​களில் 2 வாரங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு கடந்த சில நாட்​களாக பொது​வெளி​யில் காணப்படவில்லை என்று தகவல் பரவி வரு​கிறது.

இந்த சூழ்​நிலை​யில், ஈரானின் புரட்​சிகர பாது​காப்​புப் படை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ”குழந்​தைகளைக் கொல்​லும் இந்தக் குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம்” என கூறப்​பட்​டுள்​ளது.

மார்ச் 12ம் தேதி வெளி​யான வீடியோ ஒன்​றில், நெதன்​யாகு​வின் ஒரு கையில் ஆறு விரல்​கள் இருப்​பது போலத் தெரிவதைச் சுட்டிக்காட்​டி​யுள்ள பல இணை​யதளப் பயனர்​கள், அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எடிட் செய்​யப்​பட்ட வீடியோவாக இருக்​கலாம் என்ற சந்​தேகத்தை எழுப்​பி​யுள்​ளனர்.

அந்த வீடியோ​வில், 76 வயதான நெதன்​யாகு, ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் வான்​வழித் தாக்​குதல்​களைத் தொடங்​கிய பிறகு தனது முதல் செய்​தி​யாளர் சந்​திப்​பில் உரையாற்​றி​னார். அதில் ஈரானின் புதிய உச்ச தலை​வர் மோஜ்தாபா காமேனியை கொல்​லப்​போவ​தாக மறை​முக​மாக அச்​சுறுத்​தி​யதுடன், இஸ்​ரேலிய ராணுவத்​தின் நடவடிக்கைகளையும் நியாயப்​படுத்​தி​னார்.

இதனிடையே அமெரிக்க அரசி​யல் வர்​ணனை​யாளர் கேண்​டஸ் ஓவன்ஸ் உட்பட பலரும், ‘பிபி எங்​கே?’ (நெதன்​யாகு​வின் செல்​லப்​பெயர்) எனக் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். இதனிடையே, பெஞ்​சமின் நெதன்​யாகு இறந்​து​விட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் பரவும் செய்​தி​களை அவரது அலு​வல​கம் மறுத்​துள்​ளதுடன், அவர் நலமாக உள்​ளார் என்​றும் தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here