திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (32) என்பவரிடம், இரணியல் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜெயராஜ், துபாயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அவரது மனைவி லிபினாவின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சத்தை பெற்றுள்ளார். வேலை வாங்கி கொடுக்காததால் ஏமாற்றமடைந்த ஜெயக்குமார், குமரி எஸ்பி-யிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில், இரணியல் போலீசார் ஸ்டாலின் ஜெயராஜ் மற்றும் அவரது மனைவி லிபினா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
