சுங்கான்கடை, ஐக்கியபுரம் பகுதி சேர்ந்தவர் ஏசுபாதம் (54). இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். இவர் பேயன்குழியில் உள்ள ஒரு துணி கடையில் டைலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு சுங்கான்கடையில் பஸ்ஸில் வந்து இறங்கினார். பின்னர் வீட்டிற்கு செல்வதாக சாலை ஓரம் ஒதுங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் இருந்து தக்கலை நோக்கி வேகமாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக ஏசுபாதம் பின்னால் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு இடுப்பு கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இரணியல் போலீசார் ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.